“யாருப்பா அந்த வில்லேஜ் விஞ்ஞானி..” காப்பி அடிப்பதை தடுக்க பலே ஐடியா..! வைரல் வீடியோ..!

899

கர்நாடகாவின் ஹவேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தேர்வில் மாணவர்கள் முறைகேடு செய்வதை தடுக்கவும், பிறரை பார்த்து எழுதுவதை தடுக்கவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டது.

தலையில் அட்டைப்பெட்டி அணிந்தபடி மாணவர்கள் தேர்வு எழுதிய புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவியதால், இந்த விவகாரம் கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில கல்வித்துறை அமைச்சர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Advertisement