தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை..! கர்நாடகாவிற்கு எதிரான வழக்கு..! உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு..!

379

கர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலையில் உற்பத்தியாகும் தெண்பெண்ணை ஆறு, ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வழியாக தூரம் பயணித்து கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லையை ஒட்டி, கர்நாடக அரசு புதிய அணை கட்ட திட்டமிட்டு, அதற்கான ஆய்வு பணிகளை தொடங்கியது.

இதையடுத்து, கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்தநிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட தடையில்லை எனக்கூறி தமிழக அரசு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of