ஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..! ஒப்புதல் வழங்கிய அமித்ஷா..!

442

கர்நாடாகாவில் முதலமைச்சராக இருந்த குமாரசாமியின் ஆட்சி பெரும்பான்மை நிரூபிக்க முடியாததால் களைக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடாகவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். பதவியேற்று 1 மாதம் ஆகியும், இதுவரை எந்த அமைச்சர்களும் பதவியேற்கவில்லை.

கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்த பிறகே அனைத்து அமைச்சர்களும் பதவியேற்பார்கள் எனக் கூறப்பட்ட நிலையில், எடியூரப்பாவின் இந்த கோரிக்கைக்கு நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் வழங்கியுள்ளார்.

வரும் செவ்வாய்க்கிழமை கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும். அன்றைய தினம் பிற்பகலில் அனைத்து புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக்கொள்வார்கள்’ என அம்மாநில முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சியின் ஆட்சி கவிழ்ந்ததற்கு, அமைச்சரவை அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்களும், ஒருமித்த முடிவு எடுக்காததுமே காரணம் என்று பார்க்கப்பட்டது. இதனால் அமைச்சரவை அமைக்கும் முன்பு, எம்.எல்.ஏக்களின் கருத்துகளை கேட்டு ஒருமித்த முடிவு எடுக்க உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of