“மேகதாது – பேசித் தீர்க்க தயார்” – கர்நாடக அரசு கடிதம்

473

மேகதாது அணை திட்டம் குறித்து பேச நேரம் ஒதுக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் எழுதியுள்ள கடிதத்தில்,
மேகதாது விவகாரத்தில் பிரச்சனையை நட்பு ரீதியாக பேசித் தீர்க்கவே கர்நாடக அரசு விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேகதாதுவில் அணைக் கட்டினால் மழைக்காலத்தில் மேட்டூரிலிருந்து காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கலாம் என்றும் அணை பற்றி தமிழக அரசும், தமிழக மக்களும் நினைப்பது வேறு, ஆனால் உண்மை நிலை வேறு என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விரிவாக பேச தங்களுக்கு நேரம் ஒதுக்குமாறு தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ள நிலையில் கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of