மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம்

358

மேகதாதுவில் அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ள கர்நாடகா இன்று அணை கட்டும் பகுதியில் ஆய்வு செய்ய உள்ளது.

மேகதாது அணை தொடர்பாக பெங்களூருவில் கர்நடாக மாநில அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய கர்நாடக நீர்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்றும், இந்த திட்டத்தை கர்நாடகா ஒருபோதும் கைவிடாது எனவும் தெரிவித்தார்.

அணை விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் கூறினார்.
வனத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அணை கட்டும் பகுதியில் இன்று ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறினார்.