“எங்கள் ராஜுனாமாவுக்கு சித்தராமையா தான் காரணம்..!” கர்நாடக அதிருப்தி எம்எல்ஏவால் சர்ச்சை!

567

கர்நாடகாவில் 16 எம்.எல்.ஏக்கள் குமாரசாமி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜுனாமா செய்தனர். இதனால் கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 95 எம்.எல்.ஏக்களின் ஆதரவை மட்டும் குமாரசாமி பெற்றதால், ஆட்சி கலைந்தது.

இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களில் சிலர் கர்நாடகா திரும்பியுள்ளனர். அதில் எல்லபூர் தொகுதியின் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ சிவராம் ஹெப்பர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், எங்கள் திடீர் ராஜினாமாவுக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா காரணம். அவர்தான் எங்களை ராஜினாமா செய்யத் தூண்டினார். நாங்கள் இன்னும் காங்கிரஸில் தான் உள்ளோம். என்று தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு சித்தராமையா அவரது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“அதிருப்தி எம்.எல்.ஏக்களை தூண்டி நான் ராஜினாமா செய்யச்சொன்னதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தீய நோக்கத்துடன் ஒரு பொய்யான குற்றச்சாட்டை அவர்கள் என் மீது தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று அவர்கள் தொடர்ந்து பேசிவந்தால் தக்க பதிலடி தருவேன். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கட்சியையும், வாக்காளர்களையும் முதுகில் குத்தியுள்ளனர். அதனால் அவர்கள் மக்கள் மத்தியில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

இதைச் சரிசெய்ய அவர்கள் என் மீது பழி சுமத்துகின்றனர். எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும். சத்யமேவ ஜெயதே!”

எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of