கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ 2 குறைப்பு – கர்நாடக முதல்வர்

499

கர்நாடகாவில் பெட்ரோல் விலையை குறைக்கும் வகையில், மாநில வரியான VAT வரியை 2 ரூபாய் குறைத்து, அம் மாநில முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானாவை தொடர்ந்து, கர்நாடகா அரசு இந் நடவடிக்கையை எடுத்துள்ளது.

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனிடையே, பெட்ரோல், டீசல் விலையை குறைத்து, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் நடவடிக்கை மேற்கொண்டன. அதன் அடுத்தக்கட்டமாக, கர்நாடகாவில் பெட்ரோல் மீதான வாட் வரியை 2 ரூபாய் குறைத்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால், அம்மாநிலத்தில் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. இந்நிலையில், மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.