கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் கெடு…!

292

ராஜினாமா கடிதம் அளித்துள்ள எம்.எல்.ஏ-க்களுக்கு இன்று காலை 11 மணி வரை சபாநாயகர் ரமேஷ் குமார் அவகாசம் அளித்துள்ளதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆளுங்கட்சி கூட்டணியை சேர்ந்த 16 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால், குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவகுமார், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஒருமுறை தகுதி நீக்கம் செய்யப்பட்டால் மீண்டும் உறுப்பினராக முடியாது என்று தெரிவித்தார். எனவே ராஜினாமா கடிதம் அளித்துள்ள எம்.எல்.ஏ-க்களுக்கு இன்று காலை 11 மணி வரை அவகாசம் அளித்து சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக கூறினார்.

அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என்றும் அவர்களுக்கு புதிய அரசில் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் பா.ஜ.க சமரசம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of