பாபநாசம் பட இயக்குனர் ஜித்து ஜோசப்புடன் இணையும் கார்த்தி

334

பாண்டியராஜின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, ‘தேவ்’ என்ற படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். தேவ் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வரும் நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் கார்த்தி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ‘பாபநாசம்’ பட புகழ் இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கவுள்ளார். த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here