சிவகார்த்திகேயன் தயாரிப்பில் களமிறங்கும் “கார்த்திக் வேணுகோபாலன்”

347

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் புதுமுக இயக்குனராக களமிறங்கும் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் அன்னைமையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசும்போது “என்னைப் போன்ற ஒரு அறிமுக இயக்குனருக்கு, இது கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வது போல உள்ளது என்றார்.

எங்கள் திரைப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்திருப்பது ஒட்டுமொத்த குழுவுக்கும் மகிழ்ச்சியான ஒரு தகவல். இயற்கையாகவே, நாங்கள் கதை, திரைக்கதை எழுதும்போதே குடும்ப ரசிகர்களுக்கான படமாக நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜாவை கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இரும்தோம்.

NUNUOR

இப்போது, சென்சாரில் நல்ல ஒரு சாதகமான முடிவு கிடைத்திருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை எங்களுக்கு மேலும் வலுவாக்குகிறது. படம் 90% நகைச்சுவை மற்றும் ரசிக்கக் கூடிய சுவாரசியமான தருணங்களை கொண்டிருக்கும், அதனுடம் நல்ல ஒரு செய்தியையும் கொண்டிருக்கும்” என்றார்.

ஒட்டுமொத்த படக்குழுவுடன் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி கூறும்போது, “இது ஒரு அமைதியான மற்றும் அழகான அனுபவம், எல்லோரும் அதனை முழுமையாக அனுபவித்தோம். ரியோ ராஜின் அலட்டல் இல்லாத, மிக சிறப்பான நடிப்பு அவர் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது.

உண்மையில், இந்த படத்தில் எல்லா கதாபாத்திரங்களுமே யதார்த்தமானவை, நடித்த எல்லா நடிகர்களும் தங்கள் யதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளனர். ஷிரின் காஞ்ச்வாலா வசன உச்சரிப்புக்காக தமிழ் வரிகளை புரிந்து கொள்ள படப்பிடிப்பு தளத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தார். விரைவில் அவர் தமிழ் மொழியை கற்றுக் கொள்வார்.

ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஏற்கனவே ஆன்லைன் ஊடகங்கள் மூலம் மிகவும் ஒரு பிரபலமான முகமாக இருந்து வருகிறார். பல படங்களில் முக்கிய பங்காற்றி வரும் அவர் இந்த படத்துக்கு கூடுதல் பலமாக இருப்பார். ராதாரவி சார் மற்றும் நாஞ்சில் சம்பத் சார் போன்ற மூத்த கலைஞர்களுடன் பணிபுரிவது என் பயணத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக்குகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, என்னை மற்றும் என் ஸ்கிரிப்டை நம்பிய சகோதரர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்” என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of