மாமியார் மருமகள் சண்டையை பார்க்க வசதி செய்து தருகிறேன்! கார்த்திக் சிதம்பரம் கலகல!

459

நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர், தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு சிலரின் பிரச்சாரங்கள் மக்களை கவர வேண்டும் என்பதற்காக இருந்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை வேட்பாளரும், சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரம் நகைச்சுவையாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

அவர் பிரச்சாரத்தின் போது, டிவி சீரியலில் வரும் மாமியார் மருமகள் சண்டையை பார்த்து ரசிக்க வசதியாக கேபிள் கட்டணத்தை குறைத்து தருவதாக வாக்குறுதி அளித்தார். தன்னை சீரியலில் வரும் கதாநாயகனாக நினைத்து தனக்கு வாக்களிக்க பெண்களிடம் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து தேனீர் கடையில் டீ அருந்தியபடி லயோலா கல்லூரி கருத்துகணிப்பு தமக்கு சாதகமாக இருப்பதாக செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் தெரிவிக்க, அது தங்களுடைய கருத்துகணிப்பு அல்ல என்று லயோலா கல்லூரி மறுத்து இருப்பதாக செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியதும் இதற்கு மோடி தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினார்

அவரது இந்த பிரச்சாரம் பெண்களை கவர்ந்ததோ இல்லையோ, சமூக வலைதளத்தில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி உள்ளது. அதே நேரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் நகைச்சுவை உணர்வை காங்கிரஸ் தொண்டர்கள் கண்டு ரசித்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of