மாநகரம் பட இயக்குநருடன் இணையும் கார்த்தி! பர்ஸ்ட் லுக் வெளியீடு!

397

தேவ் படத்தை தொடர்ந்து கார்த்தி தற்போது ‘மாநகரம்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்திற்கு கைதி என்று தலைப்பு வைத்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

தற்போது படக்குழுவினர் ‘கைதி’ என்ற தலைப்பை உறுதி செய்து, பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.

80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், எஞ்சிய படப்பிடிப்பையும் விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of