முன்ஜாமீன் கோரி கருணாஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்

201
karunas

பூலித்தேவர் பிறந்த நாள் விழாவில், வாகனம் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு நெல்லை மாவட்டம் நெல்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள பூலித்தேவன் நினைவிடத்தில் பல்வேறு தரப்பினர் மாலை அணிவிக்க வந்தனர்.

அப்போது வாகனங்கள் நிறுத்துவது குறித்த மோதலில், தமிழ்நாடு தேவர் பேரவையின் மாநிலத் தலைவர் முத்தையாவின் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது.

கருணாசும், அவரது ஆதரவாளர்களும்தான் தாக்குதலில் ஈடுபட்டதாக, முத்தையாவின் சார்பில் புளியங்குடி காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here