கருணாஸ் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி

300
Karunas

நெஞ்சுவலி காரணமாக, ஜாமீனில் வெளியே வந்துள்ள திருவாடாணை எம்.எல்.ஏ கருணாஸ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சரையும், காவல்துறையையும் அவதூறாக பேசிய வழக்கு மற்றும் ஐ.பி.எஸ் கிரிக்கெட் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்ய எம்.எல்.ஏ கருணாஸ் அண்மையில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதனிடையே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தெரிகிறது. இதனிடையே நெல்லையில் தமிழ்நாடு தேவர் பேரவை நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்த வழக்கில் எம்.எல்.ஏ கருணாசை தேடி நெல்லை போலீசார் அவரது வீட்டிற்கு வந்தனர்.

அப்போது கருணாஸ் வீட்டில் இல்லை. மேலும் கருணாஸ் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வரவில்லை. இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருணாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது