கருணாஸ் புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றம்

638

முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ கருணாஸ், முதலமைச்சரை அவதூறாக பேசியதாகவும், திநகர் காவல் துணை ஆணையர் அரவிந்தனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியதாக அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து கருணாசை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்பு ஆஜர்படுத்தார்.

அப்போது கருணாசை வரும் அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் அவர் மீதான கொலை முயற்சி வழக்கு 307-ஐ ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட எம்.எல்.ஏ கருணாஸ், வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.