அமைச்சர் கருப்பண்ணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – துரைமுருகன்

93

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.சி. கருப்பண்ணன்

பொதுமக்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்காமல் தவறு செய்து விட்டீர்கள் என்றும் அதிமுக நிதி ஒதுக்கினால் மட்டுமே இங்குள்ள திமுகவினரால் நலத்திட்டங்கள் செய்ய முடியும் என்பதை சிந்திக்காமல் வாக்களித்து விட்டீர்கள் என்று கூறினார்.

அமைச்சரின் இந்த பேச்சு மோசமான செயல் என்றும் அரசியலமைப்புக்கு எதிரான நடைமுறை எனவும் தமிழக ஆளுநருக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் புகார் மனு அனுப்பியுள்ளார்.

அமைச்சராக பொறுப்பேற்கும் போது, எந்தவொரு விருப்பு, வெறுப்பின்றி, பாரபட்சமில்லாமல் அனைத்து மக்களுக்கும் பணியாற்றுவேன் என்று உறுதிமொழி எடுத்த அமைச்சர் கருப்பணனின் பேச்சு, சட்டத்திற்கு புறம்பானது என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of