காஷ்மீர் மாநிலம் இதுவரை பெற்றுவந்த சிறப்பு சலுகைகள் என்னென்ன?

1544

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து 370 உரிமை சட்டம் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த மாநிலத்திற்கு இதுவரை இருந்த சலுகைகள் இனிமேல் இருக்காது. இதுவரை காஷ்மீர் மக்களுக்கான சலுகைகள் என்னவென்பதை பார்க்கலாம்..!

ராணுவம், வெளியுறவு, தகவல்தொடர்பு துறைகள் தவிர மற்ற துறைகள் தொடர்பாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாது.

ஜம்மு-காஷ்மீரில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அசையா சொத்துக்கள் எதுவும் வாங்க முடியாது. ஆனால் காஷ்மீர் மாநிலத்தவர்கள் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் அசையா சொத்துக்கள் வாங்க உரிமை உண்டு.

காஷ்மீர் மாநில பெண்கள் வேறு மாநிலத்தவரை திருமணம் செய்தால் அந்த பெண்களும் காஷ்மீரில் அசையா சொத்துக்கள் எதுவும் வாங்க முடியாது.

ஆனால் காஷ்மீர் மாநில ஆண்கள் வேறு மாநில பெண்களை திருமணம் செய்தால் அசையா சொத்துக்கள் வாங்கலாம்.

காஷ்மீர் மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் 6 ஆண்டுகள்.

மாநில எல்லைகளை குறைக்கவோ கூட்டவோ பாராளுமன்றத்தால் முடியாது.

சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களை ரத்து செய்ய முடியும்.

தனி கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு.

அரசியல் சாசனத்தின் 238-வது பிரிவு காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது.

பல்வேறு மாநிலங்கள் இருக்கும் போது காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க கூடாது. சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா கூறி வந்தது.

இந்த சிறப்பு சட்டத்தை உருவாக்க டாக்டர் அம்பேத்கரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

பின்னர் நேரு மந்திரி சபையில் மந்திரியாக இருந்த கோபாலசாமி அய்யங்காரால் 370-வது பிரிவு உருவாக்கப்பட்டது.