இரண்டு பிரதமர்கள் ஆட்சி செய்வதை ராகுல் ஏற்கின்றாரா? அமித் ஷா கேள்வி

339

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் வாக்காளர்களை தன்வசமாக்க பல தேர்தல் அறிக்கைகளை அள்ளி வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நன்டகவுன் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,

“அம்மாநிலத்தில் உள்ள 11 பாரளுமன்ற தொகுதிகளிலும் பாஜக அபார வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த அமித் ஷா, காஷ்மீர் மாநிலத்துக்கு தனியாக பிரதமர் தேவை என அம்மாநில முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா தெரிவித்த கருத்து தொடர்பாக ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

காஷ்மீருக்கென தனியாக ஒரு பிரதமர் நியமிக்கப்பட்டால் இந்தியாவில் இரண்டு பிரதமர்கள் ஆட்சி செய்வதை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்கிறாரா? என வினவிய அமித் ஷா, பாஜகவில் கடைசி தொண்டன் உள்ளவரை இந்தியாவில் இருந்து காஷ்மீரை யாராலும் பிரிக்க முடியாது என கூறியுள்ளார்.