காஷ்மீரில் தொடரும் பதற்றம்.., மக்களின் நிலை?

132

காஷ்மீரின் பாபாகண்ட் நகரில் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு அதிரடியாக சென்ற வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். தீவிரவாதிகளுடன் தொடர்ந்து 3வது நாளாக சண்டை நடந்து வரும் நிலையில், இன்று, மத்திய ரிசர்வ் போலீசார் 2 பேர் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் 2 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டு உள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியானது. தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்தது.

இதில், 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்திய தரப்பில் மொத்தம் 5 வீரர்கள் பலியாகி உள்ளனர். துப்பாக்கி சூடு தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனால்  மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.