காஷ்மீரை உரிமை கோர அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை

362

காஷ்மீரை உரிமை கோர பாகிஸ்தானுக்கு எந்த அதிகாரமும் இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததோடு, அம்மாநிலத்தை மத்திய அரசு இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரி்த்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய அந்த இரு யூனியன் பிரதேசங்கள் வரும் அக்டொபர் 31ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.

இந்தநிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் சென்றுள்ளார். லடாக்கின் லே மாவட்டத்தில் அறிவியல் கண்காட்சி ஒன்றை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங், ஜம்மு-காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்ததில்லை எனவும், காஷ்மீரை உரிமை கோர பாகிஸ்தானுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறினார்.

இதனைத்தொடர்ந்து, லடாக்கின் பாதுகாப்பு குறித்து அங்குள்ள ராணுவ அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்துகிறார்.

Advertisement