காஷ்மீரில் அசாதாரண சூழல்..? – காஷ்மீர் செல்வேன்… – சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிரடி..!

450

காஷ்மீரில் ஐகோர்ட்டை கூட நாட முடியாத அளவிற்கு சூழல் நிலவினால் அது சாதாரண விஷயமாக கருத முடியாது. தேவைப்பட்டால் நானும் காஷ்மீர் செல்வேன் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கோகோய் காஷ்மீர் தொடர்பான விசாரணையின் போது கூறினார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் அங்கு அரசியல் தலைவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.இந்நிலையில் காஷ்மீரை சேர்ந்த காங்., மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதில் காஷ்மீர் சென்று தனது குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் தவிப்பதாக கூறி இருந்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.

காஷ்மீர் செல்ல குலாம்நபி ஆசாத்துக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அங்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து அறிக்கையாக தாக்கல் செய்யவும் கேட்டுள்ளது.

நீதிபதிகள் தங்களின் உத்தரவில், தேசிய பாதுகாப்பை மனதில் வைக்கும் போது அங்கு இயல்பு வாழ்க்கையும் நிலவிட மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகள் இயல்புடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

அங்கு அசாதாரண சூழல் நிலவுவதாக தகவல்கள் வருகிறது. மேலும் அங்குள்ள ஐகோர்ட்டை கூட சிலர் அணுக முடியவில்லை என்கின்றனர். இது போன்ற நிலைமை இருந்தால் மோசமான சூழல் ஏற்படும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறுகையில்; ” தேவைப்பட்டால் காஷ்மீருக்கு நானும் செல்வேன் ” என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of