காஷ்மீர் மாநில காவல்துறை டி.ஜி.பி. வையாத் திடீரென இடமாற்றம்

730

காஷ்மீர் மாநில காவல்துறை டி.ஜி.பி. வையாத் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய டி.ஜி.பி.யாக தில்பாக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

காஷ்மீர் சட்டசபை கடந்த சில மாதங்களுக்கு முன் கலைக்கப்பட்டதால், அங்கு ஆளுநர் ஆட்சி அமலில் உள்ளது. இந்நிலையில் காஷ்மீர் மாநில சிறைத்துறை டி.ஜி.பி. வையாத் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக தில்பாக் சிங் காஷ்மீர் மாநில புதிய சிறைத்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை காஷ்மீர் மாநில உள்துறை மற்றும் முதன்மை செயலாளர் ஆர்.கே.கோயால் பிறப்பித்துள்ளார்.

காஷ்மீரில் கடந்த வாரம் மூன்று போலீசாரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்ற வழக்கில், வையாத் மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தி இல்லாததே இடமாற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது

Advertisement