காசிமேட்டில் மீன் வாங்க யார் போகலாம்? – அமைச்சர் அறிவிப்பு

255

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்குள் மீன் வாங்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, சென்னையில் மிகப்பெரிய மீன் சந்தையான காசிமேட்டில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருவதால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிகிறது.

எனவே, அதனை தடுக்கும் விதமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்குள் மீன் வாங்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை 3மணி முதல் காலை 8மணி வரை மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டும் என்றும், குறிப்பாக அடையாள அட்டை வழங்கப்பட்ட படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் மட்டுமே துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.