அஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..! கொந்தளித்த ரசிகர்கள்..!

492

நடிகர் அஜித்குமாரின் ரசிகர்களுக்கும், நடிகை கஸ்தூரிக்கும் அடிக்கடி டுவிட்டரில் சண்டைகள் வருவது வழக்கம். கஸ்தூரி ஒன்னு சொல்ல, பதிலுக்கு ரசிகர்கள் ஒன்னு சொல்ல இப்படியே மாற்றி மாற்றி சண்டைப் போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

அந்த வகையில், இரண்டு தரப்புக்கும் இடையே தற்போது புதிய சண்டை ஏற்பட்டுள்ளது. அதாவது, அஜித் ரசிகர் ஒருவர், கஸ்தூரி நடித்த பழைய படத்தின் வீடியோ ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதுமட்டுமின்றி, கஸ்தூரியை கிழவி என்றும் அந்த ரசிகர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்து கோபமடைந்த கஸ்தூரி, அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்தார். மேலும், என்னை கிழவி என்று சொல்கிறார்களே.

என்னை விட வயதில் 5 வயது மூத்தவர் தான் அஜித் என்று கூறியிருந்தார். கஸ்தூரி இவ்வாறு பேசியிருப்பது அஜித் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

Advertisement