மோடி இப்படிப்பட்டவரா..? தனுஷின் தந்தை சொன்ன பெரும் விளக்கம்..! காரணம் அவரது குழந்தைகள்..!

838

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனின் மக்கள் சேவை மையம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, இயக்குநரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கஸ்தூரி ராஜா, மோடியை மிகவும் பெருமையாக கூறியுள்ளார். காமராசருக்கு பிறகு மோடி தான் இந்தியாவின் தலைவர்களின் பட்டியலில் உள்ளார் என்றும், உலக நாடுகள் எல்லாம் மோடியின் பெயரை சொல்ல மிகவும் அச்சப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும், நம்முடைய விஞ்ஞான வளர்ச்சியும் மோடியின் அறிவுப் புகழும் எனக்குத் தெரியவில்லை. என் குழந்தைகள்தான் எனக்குத் தெரியப்படுத்துனாங்க என்று கூறிய அவர், நீங்களும் உங்களின் பெற்றோர்களிடம் மோடியின் புகழ் பற்றி தெரியப்படுத்துங்கள் என்று தெரிவித்தார்.

இவரைத்தொடர்ந்து பேசிய ஞானவேல்ராஜா, மத்திய அரசு இந்தியை திணிப்பது போல் எனக்கு தெரியவில்லை என்றும், ஒரு மொழியை கற்பதால் இன்னொரு மொழி அழியாது என்றும் தெரிவித்தார்.