எம்.ஜி.ஆர் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய கஸ்தூரி!

1426

நேற்றிரவு கொல்கத்தா-சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியபோது, ஆட்டம் படு ஸ்லோவாக இருந்தது. எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக சென்னை அணி நின்று நிதானமாக விளையாடியது.

இந்த சந்தர்ப்பத்தில் கடுப்பாகி போன நடிகை கஸ்தூரி ஒரு ட்வீட் போட்டார். ‘என்னய்யா இது. பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க’ என்றார்.

இதனால் கிரிக்கெட் ரசிகர்கள், அதிமுக தரப்பினர் என அனைவருமே கொதிப்படைந்தனர். உடனடியாக கஸ்தூரியின் ட்வீட்டுக்கு பதிலடிகளை தர ஆரம்பித்து விமர்சிக்க தொடங்கினர்.

இதனால் அப்செட் ஆன நடிகை கஸ்தூரி, தான் பதிவிட்ட ட்வீட்டுக்கு விளக்கம் அளித்துள்ளதுடன், மன்னிப்பும் கேட்டு கொண்டுள்ளார். தனது ட்வீட்டில்,

“எம்.ஜி.ஆர் காதல் காட்சியில் நடித்ததில், கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன்” என்றார்.

Advertisement