ராஜேந்திர பாலாஜியை இதைவிட வேறுயாரும் கலாய்க்க முடியாது.., கஸ்தூரியின் டுவிட்

1543

சில நாட்களுக்கு முன்பு கமல் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்துக்களை பற்றி தவறாக பேசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கமலின் இந்த பேச்சினை இந்து அமைப்புகள் எதிர்த்து வந்தாலும், ஒருசாரார் கமல் பேசியது சரிதான் என்றும் சொல்லி வருகின்றனர்.

கமலின் இந்த பேச்சிக்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல் நாக்கு அறுபடும் என்று வன்முறையை கையில் எடுத்துவிட்டார். ஒரு அமைச்சர் இப்படி பேசலாமா என்று கேட்டதற்கு, அப்படி பேசியதில் எந்த தவறும் இல்லை, மிரட்டலும் கிடையாது என்றார். அமைச்சரின் இந்த விளக்கத்தை கஸ்தூரி தனது டுவீட்டில் பதிவிட்டுள்ளார்.

அதில், “கமல் நாக்கு அறுபடும் ” என்று கூறியதில் எந்த மிரட்டலும் கிடையாது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி… பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்….கைப்புள்ள காமெடி தான் நினைவுக்கு வருது!” என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைப்புள்ள ரேஞ்சுக்கு கஸ்தூரி கலாய்த்துள்ளது தான், இவரின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகின்றனர்.

’கமல் நாக்கு அறுபடும் ” என்று கூறியதில் எந்த மிரட்டலும் கிடையாது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்….கைப்புள்ள காமெடி தான் நினைவுக்கு வருது ! pic.twitter.com/KgEYeObJDy

— Kasturi Shankar (@KasthuriShankar) May 14, 2019

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of