கருந்துளை கண்டுபிடிப்பின் நாயகியாக திகழும் கேட்டி பௌமன்.

270

கடந்த புதன்கிழமை அன்று உலக விஞ்ஞானிகள் இணைந்து உற்சாகமும் குதூகலிப்புடன் உலகின் ஐந்து இடங்களில் ஒரே நேரத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்த்தினார்.

26,000 ஒளியாண்டு தொலைவில் உள்ள சஜிடேரியஸ்A* மற்றும் 6 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ள M87எனும் கேலக்சியின் மீ ராட்சச கருந்துளை ஆகியவற்றை புகைப்படம் எடுத்து சாதனை படைத்துள்ளோம் என அறிவித்துள்ளனர்.

இதுவே கருந்துளைகளின் முதல் முதல் புகைப்படம். இந்த கருந்துளையின் அமைப்பை கண்டுபிடிப்பது என்பது இதுவரை அறிவியல் துறையின் மிகப் பெரிய அசாத்திய கனவாக இருந்து வந்தது.

black-hole

அந்த சவாலை முறியடித்து கருந்துளையின் முதல் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறது அறிவியல் உலகம். இந்த முயற்சியின் நாயகியாக பார்க்கப்படுகிறார் கேட்டி பௌமன்.

இவர் எழுதிய அல்காரிதம்களே இன்றைக்கு நாம் கொண்டாடும் கருந்துளை புகைப்படத்தின் கருவாக அமைந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து உலக அளவில் பெண்களின் ஆதர்ச நாயகியாக உயர்ந்து நிற்கிறார் கேட்டி.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of