பிக்பாஸிலிருந்து வெளியேறிய கவின்.. காரணத்தை போட்டுடைத்ததால் மனமுடைந்த சாண்டி..!

1312

பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற முடிவு செய்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் கவின்.

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடிவடைய இருக்கிறது. மொத்தம் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது ஆறு போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

இவர்களில் முகென் நேரடியாக பைனலுக்கு செல்ல கோல்டன் டிக்கெட் பெற்று விட்டார். அவரைத் தவிர மற்ற ஐந்து போட்டியாளர்களும் இந்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிரடியாக யாராவது ஒரு போட்டியாளர் ஐந்து லட்சத்தை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல விருப்பமா என பிக் பாஸ் கேட்டார். கடந்த சீசனிலும் இதே போன்ற ஆஃபர் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை யாரும் தேர்வு செய்யவில்லை.

ஆனால் இம்முறை பிக் பாஸ் கேட்டவுடனேயே இந்த டீலுக்கு சம்மதம் சொல்லி விட்டார் கவின். இது சாண்டி மற்றும் லாஸ்லியாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இன்றைய முதல் புரொமோவில் கவினிடம் இது பற்றி சாண்டி கேட்கிறார்.

அதற்கு கவின் ஒரு விளக்கமும் தருகிறார். அதில், ‘இவ்வளவு செய்து விட்டு மேடையில் எப்படி நிற்க முடியும். உன்கூட சரியா பேசியே எத்தனை நாள் ஆச்சு. இன்னும் பத்து நாள் தான் வெளில வாங்க பார்த்துக்கலாம்’ என கவின் கூறுகிறார்.

அதோடு தன் கடனை அடைப்பதற்காகத் தான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததாக கவின் ஏற்கனவே பலமுறை கூறி விட்டார். எனவே தற்போது கூடுதலாக பணம் கிடைத்தால் அது தனக்கு மேலும் உதவியாக இருக்கும் என அவர் கருதி இருக்கலாம். எனவே தான் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக கருதப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of