அதிமுக முன்னாள் எம்.பி கைது.. பிப். 7 வரை நீதிமன்றக்காவல்.. – கோவை நீதிமன்றம் அதிரடி..!

143

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியை பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி, அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வருவதாகவும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் கட்சி உறுப்பினர்போல செயல்பட்டு வருவதாகவும் அதிமுகவைச் சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் கே.சி. பழனிசாமி இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு கோவை லாலிரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மீது ஆள்மாறாட்டம் உட்பட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸார், அவரிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதன்பிறகு, அவர் கோவை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரை பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of