ராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி..

783

மதுரை மாவட்டம் கீழடி அகழாய்வு பணியின் மூலம் தமிழர்களின் தொன்மையான வரலாற்று சிறப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில் மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதிகளில் சமீபகாலமாக பல்வேறு தொல்லியல் எச்சங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக பேரையூர் அருகே காரைக்கேணி பகுதியில் உள்ள செங்கமேடு எனும் இடத்தில் இருக்கும் பழமையான சத்திரம் ஒன்றை கண்டறிந்த வரலாற்றுத்துறை பேராசிரியர் முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர், கள ஆய்வு மேற்கொண்டதில் பல்வேறு அரியவகையான பொருட்கள் கண்டறிப்பட்டுள்ளன.

இந்த சத்திரத்தின் சுவர்களிலும், அருகில் உள்ள கிணற்றின் சுவர்களிலும் இராஜராஜசோழனின் கல்வெட்டுகள், பழங்கால தமிழ் எழுத்துக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவைகள் கி.பி.9ஆம் நூற்றாண்டு பழமையான தமிழ் எழுத்துக்கள் மற்றும் 8 வட்டெழுத்து துண்டு கல்வெட்டுகள் என அறியப்பட்டுள்ளது.

Advertisement