தமிழர்களின் பெருமையை மீண்டும் நிரூபித்த கீழடி

230

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வருகிறது.

பழங்கால மனிதர்கள் வாழ்விடப்பகுதியாக கருத்தப்படும் அகரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் புதிதாக 5 அடுக்கு கொண்ட உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது.

உரை கிண்று 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

முன்னதாக 6ம் கட்ட அகழாய்வில் இதுவரை 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி, மனித எலும்பு கூடுகள், விலங்கு எலும்பு கூடு, தங்க நாணயம், பாசி மணிகள், சங்கு வளையல்கள், எடைக் கற்கள், கொள்கலன்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.