“இந்த முதியவர் இல்லைனா கீழடி அகழ்வாராய்ச்சி அவ்வளவு தான்..” தொல்லியல் துறை ஆய்வாளர் பரபரப்பு தகவல்..!

1685

பல்வேறு ஆண்டுகால வரலாற்றைக்கொண்டது தமிழ் நாகரீகம். இதற்கு உதாரணமாக கீழடியை சொல்லலாம் என்று தமிழ் ஆர்வலர்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இவ்வாறு இருக்க ஒருவழியாக முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து முடிந்தது.

இந்நிலையில் சென்னை பெரியமேட்டில் தமிழ்க்கலை இலக்கிய பேரவையின் சார்பில் கீழடியில் கிளைவிட்ட வேர் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமர்நாத் ராமகிருஷ்ணா, கீழடி நாகரிகத்தை சங்க கால நாகரிகம் என அழைப்பதே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியது பின்வருமாறு:-

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள தொல்லியல் மேடுகளை கண்டறியும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டிருந்தோம். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் வீடு கட்டுவதற்காக குழி தோண்டியபோது, குடுவை ஒன்று கிடைத்ததாக கூறி தங்களிடம் அதை கொடுத்தார்.

அந்த குடுவையை ஆராய்ச்சி செய்தபோது, அது பழங்காலத்தை சேர்ந்ததும் என்றும், அது நெருப்பினால் சுடப்பட்டு செய்தது என்றும் தெரியவந்தது. அந்த முதியவர் முதன்முதலாக தொல்லியல் துறையினரிடம் காண்பித்த குடுவைதான் வைகை நதிக்கரையில் இரு புறமும் தொல்லியல் மேடுகள் கொண்ட 200 கிராமங்கள் இருந்தது தெரிய வந்ததற்கு காரணமாக அமைந்தது.

அந்த கிராமங்களில் ஒன்றுதான் கீழடி. அந்த முதியவர் மட்டும் அந்த குடுவையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்காமல் இருந்திருந்தால் தமிழர்களின் வரலாறு தெரியாமலேயே இருந்திருக்கும். இதுகுறித்த ஆய்வுக்கு இன்னும் கூடுதல் காலங்கள் பிடித்திருக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of