“ரஜினி 168” – இணைகிறாரா கீர்த்தி சுரேஷ் ? | Keerthi Suresh in Rajini 168 ?

756

தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில் ரஜினிகாந்தின் 168-வது படத்தை சிவா இயக்குகிறார். விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க இருந்த சிவா, தற்போது ரஜினியின் 168-வது படத்தை இயக்க உள்ளார்.இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் படத்தில் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோதிகா ஏற்கனவே ரஜினி அவர்களுடன் இணைந்து சந்திரமுகி படத்தில் நடித்துள்ளார், ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிகாந்துடன் நடிக்கும் முதல் படம் இது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of