“You are unselected..” பாலிவுட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ்..! படக்குழு சொன்ன காரணம்..!

503

தமிழில், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படமான மகாநடி படத்தில் நடித்து அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதற்காக தேசிய விருதையும் அவர் பெற்றார். இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டிற்கு சென்ற கீர்த்தி சுரேஷ், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானுடன் மைதான் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் அந்த திரைப்படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட படக்குழு, அஜய் தேவ்கானுக்கு ஜோடியாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடிக்க கீர்த்தி சுரேசை தேர்வு செய்தபோது அதற்குரிய தோற்றத்தில் அவர் இருந்தார்.

ஆனால் தற்போது எடை குறைந்து ஒல்லியாகி விட்டார். கீர்த்தி சுரேசை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினோம். குழந்தைக்கு அம்மாவாக நடிக்க அவரது உடல்வாகு பொருந்தவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of