200 ரூபாய் கடன்! திருப்பி கொடுக்க இந்தியா வந்த நாடாளுமன்ற உறுப்பினர்!

475

கென்யா நாட்டின் யாரிபாரி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் ரிஸ்சர்டு டாங்கி. இவர் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மேலாண்மை கல்வி பயின்று வந்தார்.

கல்வி பயின்ற காலத்தில் ரிஸ்சர்டு டாங்கி தான் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் உள்ள மளிகை கடை ஒன்றில் தனக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதனிடையே கல்வி படிப்பை 1989-ல் நிறைவு செய்த ரிஸ்சர்டு தனது சொந்த நாடான கென்யாவுக்கு சென்றார். அப்போது காசிநாத் ஹவ்லியின் மளிகை கடையில் ரிஸ்சர்டு பெயரில் 200 ரூபாய் கடன் தொகை இருந்தது. கென்யா திருப்பிய ரிஸ்சர்டு அரசியல் கட்சியில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினரானார்.

தற்போது, 30 ஆண்டுகளுக்கு பின்னர் மளிகை கடையில் வாங்கிய 200 ரூபாய் பாக்கியை திருப்பி கொடுக்க முடிவெடுத்து, தனது மனைவியுடன் ரிஸ்சர்டு மும்பை வந்தார். தனக்கு கடன் வழங்கிய மளிகை கடைகாரர் காசிநாத் ஹவ்லியை தீவிர தேடுதலுக்கு பின் கண்டுபிடித்தார்.

வயது முதிர்வு காரணமாக தனது வீட்டில் இருந்த மளிகை கடை உரிமையாளரை நேரில் சந்தித்த ரிஸ்சர்டு 30 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கடன் வைத்த 200 ரூபாய் பணத்தை திருப்பி அளித்து நன்றி தெரிவித்தார். மேலும், கென்ய நாட்டுக்கு தனது விருந்தினராக வரும்படி காசிநாத் ஹவ்லிக்கு ரிஸ்சர்டு அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of