வறட்சியை காரணமாக கூறி தமிழகம் தண்ணீர் தர மறுப்பதாக கேரளா குற்றச்சாட்டு

485

ஆழியாறு, சோலையாறு அணைகளில் இருந்து நீர் வழங்க உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு 3 வாரங்களில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 1970-ல் கையெழுத்தான ஒப்பந்தத்தை மீறி தமிழக அரசு செயல்படுவதாக கேரளா குற்றம்சாட்டியது.

வறட்சியை காரணமாக கூறி பல ஆண்டுகளாக தமிழகம் தண்ணீர் தர மறுப்பதாகவும் கேரளா குற்றம்சாட்டியுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஆழியாறு, சோலையாறு அணைகளில் இருந்து நீர் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு 3 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of