கேரளாவில் முழுயடைப்பு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட 750 பேரை போலீசார் கைது செய்துயுள்ளனர்.

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து பாஜக சார்பில் முழுயடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்து, மாநிலம் முழுவதும் நடந்த வன்முறையில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் காயமடைந்தனர். இதனால் பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்த வன்முறையில் ஒருவர் பலியாகியியுள்ளார். 3 பேர் கத்திகுத்து காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 750 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கேரளாவில் முழுஅடைப்பு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை எதிரொலியாக பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of