“மாற்றுத்திறனாளியின் கால்களைப் பிடித்து..” கேரள முதல்வர் செய்த செயல்..! நெகிழ்ந்த நெட்டிசன்கள்..!

399

திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பினராய் விஜயனை சந்திக்க மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் வந்திருந்தார். அவர் பெயர் பிரனாவ். சித்தூர் அரசு கல்லுரியில் படித்த இவருக்கு, இரண்டு கைகளும் இல்லாததால், தன் கால்களால் அனைத்து வேலைகளையும் செய்துக்கொள்ள தன்னை பழகிக்கொண்டார்.

மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம் அடைந்த இவர், நேற்று கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து, மனு ஒன்றையும், பேரிடர் நிவாரண நிதியையும் அளித்தார்.

தனது காலால் பிரனாவ் அளித்த அந்த மனுவை, கேரள முதல்வர் வாங்கிக்கொண்டார். பின்னர் இருவரும் செல்பி எடுத்துக்கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்களை கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இந்த நாளில் நான் சட்டமன்றத்துக்கு வந்தபோது இதயம் தொடும் சம்பவம் நிகழ்ந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

மாற்றுத்திறனாளி பிரனவ்வை, முதல்வர் நடத்திய விதம் குறித்து நெட்டிசன்கள் நெகிழ்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் பினராயி விஜயனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement