தனிமைப்படுத்திக் கொண்ட கேரள முதல்வர்

372

கேரள விமான விபத்து மீட்புப்பணியில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் உள்பட பலருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நேரிட்ட விமான விபத்தில், மீட்புப் பணியில் ஈடுபட்ட மலப்புரம் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட எஸ்.பி., காவலர்கள் உள்ளிட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, விபத்து நடந்த இடத்தை கேரள முதல்வர் பினராயி விஜயனும் பார்வையிட்டிருந்தார். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் பலருக்கும் தொற்று உறுதியானதால் கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

Advertisement