தங்க கடத்தல் விவகாரம் – கேரள அரசுக்கு தொடர்பில்லை

160

ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வாயிலாகவே தங்கம் கடத்தப்பட்ட சொப்னா என்ற பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர். இதனிடையே அவருடன் தொடர்பில் இருப்பதாக புகார் எழுந்ததால் முதன்மை செயலாளர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாநில முதல்வர் பினராயி விஜயன், தங்கக் கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியும் கேரள அரசு ஒரு போதும் காப்பாற்றாது என்றும், தங்கக்கடத்தல் விவகாரத்தில் சிபிஐ உட்பட எந்த அமைப்பின் விசாரணைக்கும் மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் உறுதி அளித்தார்.

கைது செய்யப்பட்ட பெண் ஐடி துறையின் கீழ் ஒரு திட்டத்துக்கான சந்தைப்படுத்துதல் பிரிவு மேலாளராக ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றியவர் என்றும், வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாகவே அவர் பணியில் அமர்த்தப்பட்டார் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of