கேரளாவில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை குறித்து முதலமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில ஆளுநர் சதாசிவம் உத்தரவிட்டுள்ளார்.சபரிமலை விவகாரத்தில் கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. கோவில் தந்திரி நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த முடியாவிட்டால் பதவி விலகலாம் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் தொடர் போராட்டங்களால் கேரளாவில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை குறித்து முதலமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் சதாசிவம் உத்தரவிட்டுள்ளார். அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக இருப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

அதேசமயம் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

 

Advertisement