“எதுக்குய்யா என் சரக்க அடிச்ச” – மகனின் “மது” பாசத்தால் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்..!

347

போலீசார் கவனத்திற்கு சென்ற வீடியோவை ஆதாரமாக கொண்டு விசாரணை நடத்தியதில் மதுவுக்காக சொந்த அப்பாவையே மகன் செய்த பகீர் செயல் அம்பலமாகியுள்ளது.

கேரள மாநிலத்தில், ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் ரித்தீஷ், 29 வயதான ரித்தீஷ் கடந்த காந்திஜி ஜெயந்தி அன்று மதுக்கடை மூடி இருக்கும் என்பதால், முன் எச்சரிக்கையாக சரக்கு பாட்டில் வாங்கி வைத்துள்ளதாக தெரிகிறது.

 

சம்பவத்தன்று ரித்தீஷின் அப்பா, மகன் வாங்கி வைத்த சரக்கை எடுத்து யாருக்கும் தெரியாமல் குடிக்க, விஷயம் தெரிந்த ரித்தீஷ் அப்பா என்றும் பாராமல் அரை நிர்வாணத்தில் அவரை அடி வெளுத்தது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் இந்த காட்சிகள் இணையத்தில் பரவி பெரும் வைரல் ஆனதை அடுத்து, போலீசார் தாமாக முன் வந்து வழக்கை விசாரித்தது மட்டும் அல்லாமல் மகன் ரித்தீஷ் மீது 6 வழக்குகள் பதியபட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of