‘கொரோனா’ என்று பெயர் கொண்ட பெண்..! படாதபாடு படுத்தும் சமூகம்..!

706

இன்றைய நாட்களில் அதிகம் பயன்படுத்தும் பெயர்களிலும், அதிகம் வெறுக்கப்படும் பெயர்களிலும் ஒன்றாக இருப்பது கொரோனா. இந்த பெயர் உங்களுக்கு பெற்றோர் வைத்திருந்தால் என்ன செய்வீர்கள். நிச்சயம் கோபம் அடைவீர்கள் அல்லவா. ஆனால், 34 வருடங்களுக்கு முன்பே ஒரு பெண்ணிற்கு வைத்துவிட்டார்கள். இதுகுறித்த தொகுப்பை இந்த கட்டூரையில் பார்க்கலாம்..

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள சுங்கோன் என்ற பகுதியை சேர்ந்தவர் சைன் தாமஸ். இவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு, பாதிரியார் தான் பெயர் வைக்க வேண்டும் என்று அவரிடம் சென்றிருக்கிறார்.

நீண்ட நேரம் யோசித்த பாதிரியார், அந்த குழந்தைக்கு கொரோனா என்ற பெயரை வைத்தார். அதற்கு, க்ரவுன் என அர்த்தம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் உலகையே அச்சுறுத்தும் கொரோனா பெயர் தனக்கு சூட்டப்பட்டுள்ளதால், படாதபாடுபட்டு கொரோனா வேதனையுடன் கூறி வருகிறார்.

அவருடன் புதியதாக பழகும் நபர்கள், இப்படியொரு பேரா என்று ஆச்சரியப்படுவார்களாம். அவருடைய குழந்தைகளும், கொரோனா அம்மா என்றும், வைரஸ் அம்மா என்றும் கிண்டல் செய்கிறார்களாம். இதனால், உள்ளுக்குள் வேதனை அடையும் அவர், ஒரு முறை கூட வெளியில் சொல்லிக்கொண்டதில்லையாம்.

இப்படி இருக்க, இந்த லாக்டவுன் நேரத்தில், ரத்தம் கொடுப்பதற்காக அந்த பெண் சென்றிருக்கிறார். அதில், பெயர் என்ற இடத்தில், இவ்வாறு எழுதியிருப்பதைக் கண்டு, மருத்துவர்களே அதிர்ச்சியடைந்தார்களாம். பிறகு விஷயத்தை பற்றி கூறியதும் அமைதியாகினார்களாம். இவ்வாறு தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் அந்த பெண், பெயரை மாற்ற மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

Advertisement