தாயின் பாசம்..! ரூ.20 லட்சத்திற்கு உடல் உறுப்புகளை விற்கும் பெண்..!

1975

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள வரப்புழாவை சேர்ந்தவர் சாந்தி. கணவனை பிரிந்து வசித்து வரும் இவருக்கு, இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இதில், பெண் குழந்தை நரம்பியல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவராவார். இந்நிலையில், சாந்தியின் இரண்டு ஆண் குழந்தைகளும், விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களின், மருத்துவ செலவிற்கும், கடன்களை அடைக்க வேண்டும் என்றும், சாந்தி தனது உடல் உறுப்புகள் அனைத்தையும் ரூ.20 லட்சத்திற்கு விற்க முன்வந்துள்ளார். அதாவது, குழந்தைகளின் மருத்துவ வசதிக்காகவும் கடன்களை அடைக்கவும், எனது உடல் உறுப்புகள் விற்பனைக்கு (இதயம் உட்பட) என்று எழுதியுள்ள பலகையை பிடித்தவாறு தனது வீட்டருகே சாந்தி இருந்தார்.

இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானதையடுத்து, அம்மாநில அரசாங்கம் உதவ முன்வந்தது. மேலும், குழந்தைகளின் சிகிச்சையை கவனித்துக்கொள்வதாகவும் மாநில அரசு உறுதியளித்திருக்கிறது.

பின்னர் சில தன்னார்வ அமைப்புகளும் அவரது குடும்பத்தின் செலவுகளைச் சமாளிக்க முன்வந்துள்ளன. எனவே தற்போது வாடகை வீட்டிற்கு குடும்பத்தினர் திரும்பியுள்ளனர்.