கேரளா நிலச்சரிவு: புதைந்து போன மக்கள் “தோண்டி எடுக்கும் ரேடார்”

280

கேரளத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்டவற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களைத்  தேடும் பணியில் ரேடாரை மீட்பு படை பயன்படுத்தி வருகிறது.

கேரள மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் அதிகநிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களின் உடல்களைக் கண்டறிவதற்காக நிலத்தில் ஊடுருவிச் செல்லும் ரேடார் கருவி  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, கேரளத்தில் இதுவரை மழை வெள்ள பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116-ஆக அதிகரித்துள்ளது.  வீடுகளைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பாதிக்கப்பட்ட 83ஆயிரத்துக்கும் அதிகமானோர் 519 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

26 பேரைக் காணவில்லை.1,204 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.