கேரள விமான விபத்து – கண்கலங்க வைக்கும் வாலிபரின் கடைசி selfie 

1401

மிகுந்த மகிழ்ச்சியுடன் குடும்பத்துடன் தாயகம் திரும்புகிறேன் என விமானம் புறப்படுவதற்கு முன், சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கில் பதிவு போட்டவர், சடலமாக வீடு திரும்பியது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை துபாயிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கோழிகோடு சர்வதேச விமான நிலையத்தில் தறையிறங்கும் போது, விபத்து ஏற்பட்டு, குறைந்தது 18 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், முகநூல் என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் சமூக தளத்தில், சுறுசுறுப்பாக எப்போதும் தீவிரமாக இருப்பவர் சரஃபு பிலசேரி. வளைகுடாவில் வேலை செய்யும் இவர், துபாயிலிருந்து தமது மனைவி, மகளுடன், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், கேரளத்திற்குப் புறப்பட்டுள்ளார்.

விமானத்தில் ஏறி, முகக் கவசம், முக தடுப்பான் ஆகியவற்றுடன் அமர்ந்துக் கொண்டு, விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், தாயகம் திரும்புகிறேன் என ஆசையுடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவரது மனைவி, குழந்தை ஆகியோருடன்கூடிய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

மகிழ்ச்சியுடன் தாயகம் திரும்ப வேண்டிய அவர், விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார். ஆனால், அவரது மனைவியும், மகளும் காயங்களோடு உயிர் தப்பி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சரஃபு பிலசேரியை பொறுத்தமட்டில், இதுவேஅவரது கடைசி புகைப்படமாக அமைந்துவிட்டது எனக் கூறி, அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் கதறியது, கல்நெஞ்சையும் சுக்குநூறாக்கிவிடும் என்றால் மிகையில்லை.

Advertisement