கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை

509

கேரளாவில் திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழையால் 488 பேர் உயிரிழந்தனர்.

ஏராளமான வீடுகள், வாகனங்கள் என கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் பொருட்சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில், திருச்சூர், பாலக்காடு, இடுக்கி, வயநாடு, பத்தனம்திட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை 64.4 முதல் 124.4 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, முதல் கட்ட எச்சரிக்கையை குறிக்கும் வகையில் மஞ்சள் வண்ண மழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாநில பேரிடர் மேலாண்மை மையத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.