தென்மேற்கு பருவமழை தாமதம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

520

கேரளாவில் தென்மேற்கு பருவமழை 8ம் தேதி தான் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும். செப்டம்பர் மாதம் வரை இந்த பருவமழை நீடிக்கும். இந்நிலையில் இந்தாண்டு 6 நாட்கள் தாமதமாகம் தேதிதான் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

ஆனால் தற்போது மேலும் 2 நாள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தென்பகுதியில் 3 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. இலங்கையில் பருவமழை தொடங்கினால் 2 நாட்களுக்குள் கேரளாவிலும் மழை தொடங்க வேண்டும்.

ஆனால் அரபிக்கடலின் மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பருவமழை தொடர்ந்து காலதாமதம் ஆகிவருகிறது. இருப்பினும் வரும் 8ம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பருவமழை தொடங்க இதுபோல் காலதாமதம் ஆனதில்லை.