ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட நபர்.. பொளந்துகட்டிய 3 பெண்கள்..

2407

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த விஜய் நாயர், youtube சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், அந்த சேனலில், பல்வேறு தரப்பு பெண்கள் பற்றியும், சினிமாவில் டப்பிங் கலைஞராக பணியாற்றும் பாக்கியலஷ்மி பற்றியும் ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ, பாக்கியலஷ்மியின் கவனத்திற்கு சென்றதையடுத்து, கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். பின்னர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், தனது தோழிகள் சிலருடன், விஜய் நாயர் வீட்டிற்கு பாக்கியலஷ்மி சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த அந்த நபரை, பெண்கள் கூட்டாக சேர்ந்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

மேலும், அந்த நபரின் முகத்தில் கரியை பூசிய அவர்கள், விஜய் நாயரை தாக்கும் காட்சிகளை, தங்களது ஃபேஸ்புக் பக்கத்திலும் லைவ் செய்தனர். தன்னை அடித்து துன்புறுத்தியதாக விஜய் நாயர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், அந்த 3 பெண்கள் மீதும், ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமும், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.